சிறைக்குள் சிக்கித் தவிக்கும் அரசியல் கைதிகள்
நாள்கள், மாதங்கள், ஆண்டுகளாக அல்லாது தமது முழு வாழ்நாள்களையே சிறைகளில் கழிக்கும் அரசியல் கைதிகள் தொடர்பாக மனிதாபிமான நடவடிக்கையொன்று அவசியமாகிறது என்று சாரப்பட அமைகிறது இக்கட்டுரை. சுரேக்கா சமரசேன என்பவரால் எழுதப்பட்ட இக்கட்டுரை, டிசெம்பர் 27 ஆம் திகதிய "ராவய" பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது. அதன் தமிழ் வடிவமே இது.2009 ஆம் ஆண்டின் மே 19 ஆம் திகதியென்பது இந்நாட்டில் நிலவிய யுத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட தினமாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.அதற்கமைய, இலங்கையென்பது பயங்கரவாதம் வேருடன் களைந்தெறியப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட பௌத்திரமானதொரு பூமி என்பதாகவும், இன்று இந்நாட்டில் பயங்கரவாதமென்ற அச்சுறுத்தல் நிலை இல்லையென்பதால் நாட்டின் பிரஜையொருவருக்குப் பயமின்றியும் "மகிழ்ச்சியுடனும்" "சுதந்திரமாகவும்" வாழ்க்கையைக் கொண்டுசெல்ல முடியுமென்பதாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது. அத்தோடு, சிங்களவர், தமிழரென்ற வேறுபாடற்று நாட்டின் அனைத்து மக்களும் ஒரு குடும்பமாக ஒத்து வாழவேண்டியுள்ளனர் என்பதும் புரியவைக்கப்பட்டது
ஞாயிறு, 24 ஜனவரி, 2010
கூட்டமைப்பும் சம்பந்தரின் ஆளுமையும்
குழம்பித் தெளிந்த கூட்டமைப்பும் சம்பந்தரின் ஆளுமையும்
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்பதுதொடர்பில் நீண்ட வாதப்பிரதிவாதங்கள், குழப்பங்கள், தன்னிச்சையான முடிவுகள், இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தனித்த முடிவு, அதனூடான அழுத்தங்கள், பல்வகைப்பட்ட விமர்சனங்கள் என பல நிகழ்வுகள் நடைபெற்று விட்டன. நீண்ட குழப்பத்தின் பின்னர், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்களின் ஏகோபித்த ஆட்சிமாற்றத் திற்கான முடிவை எட்டியது மட்டுமல்லாமல், இந்த தாமதத்தினூடாக சில அரசியல் அடைவுகளையும் நிகழ்த்தக்கூடிய தீர்மானத்தை அடைந்தமையானது ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தியது போன்றே கருத வேண்டியுள்ளது. அத்துடன் திரு. இரா.சம்பந்தர் அவர்கள் தனது அரசியல் சாணக்கியத்தையும், முதிர்ச்சியையும் வெளிப்படுத்தியதனூடாக தனது தலைமைத்துவ ஆளுமையை வெளிக்காட்டியமையானது தமிழ் பேசும் மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் விடயமே.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இந்திய, அமெரிக்கப் பார்வைகள்..!

இந்த ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் அத்தகைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதியொருவரைத் தெரிவு செய்துகொள்வது தொடர்பானதாக இருந்தாலும், சர்வதேச சமூகம் குறிப்பாக இந்தியாவும், அமெரிக்காவும் அது தொடர்பாக விசேட அக்கறை செலுத்தி வருகின்றன என்பது இரகசியமல்ல. அந்த நாடுகள் இலங்கையின் அரசியல் போக்கை உன்னிப்பாகக் கண்காணிக்கின்றன. நிலைப்பாடு மற்றும் அந்தப் பின்புலம் சம்பந்தமாக கண்ணோட்டம் செலுத்தும் விமர்சனம் இது. சீ. ஜே. அமரதுங்கவின் இந்த அரசியல் விமர்சனம் 2009 டிசெம்பர் 27 ஆம் திகதிய "லங்காதீப" பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

இலங்கை தமிழரை வெளியேற்றும் மத்திய அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

[ சனிக்கிழமை, 09 சனவரி 2010, 03:49.21 AM GMT +05:30 ]
விசா காலம் முடிந்ததால், இலங்கை தமிழர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜெயந்தன் பிரதாபன் என்பவர் கடந்த 2007ம் ஆண்டு சுற்றுலா விசாவில் இந்தியா வந்தார். ஈரோடு அகதிகள் முகாமில் தன் பெயரை பதிவு செய்து கொண்டு, ‘முகாமில் இல்லாத அகதி’ என்று சான்றிதழ் பெற்றார். பின்னர் அவர் ஈரோட்டில் வசித்தார். இவரது விசா காலம் கடந்த டிசம்பருடன் முடிந்தது. இதனால், இந்தாண்டு டிசம்பர் வரை தனது விசா காலத்தை நீட்டித்து தருமாறு ஜெயந்தன் பிரதாபன் மத்திய உள்துறை அமைச்சத்துக்கு மனு செய்தார். இந்த மனுவை நிராகரித்து, இந்தியாவை விட்டு வெளியேற ஜெயந்தனுக்கு அமைச்சகம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவில், ‘என் மீது எந்த கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். எனவே, இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்து, “மனுதாரர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கிறேன். 2 வாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
தியாகி முத்துக்குமரனுக்கு வீரவணக்க நாள் கடைபிடியுங்கள்: பழ.நெடுமாறன் கோரிக்கை

[ புதன்கிழமை, 20 சனவரி 2010, 10:10.16 AM GMT +05:30 ]
ஈழத்தமிழர்களை காக்கக்கோரி தன்னுயிர் ஈந்த தியாகி முத்துக்குமரனுக்கு வீரவணக்க நாள் கடைப்பிடிக்க பழ.நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஈழத்தமிழர்களுக்காக தன்னுடைய இன்னுயிரை ஈந்த முத்துக்குமாரின் முதலாண்டு நினைவு நாள் வருகிற 29-ம் தேதி வரவிருக்கிறது. முத்துக்குமாரின் தன்னிகரற்ற தியாகத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் 14பேரும் வெளிநாடுகளில் மூன்று பேரும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் நினைவுக்கூர்ந்து அந்நாளில் தமிழகமெங்கும் வீரவணக்க நாள் கடை பிடிக்கும்படி உணர்வுள்ள தமிழர்கள் அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அத்தனை கட்சிகளும் அமைப்புகளும் தமிழுணர்வாளர்களும் ஜனவரி 29-ம் நாள் அன்று முத்துக் குமார் மற்றும் தோழர்களின் நினைவு நாளை கடைப்பிடிக்கும் வகையில் ஊர்வலங்கள் கூட்டங்கள் முதலியவற்றை நடத்தும்படி வேண்டிக்கொள்கிறேன். சென்னையில் முத்துக்குமார் வாழ்ந்த கொளத்தூரில் 29ஆம் தேதி மாலை நடைபெறவிருக்கும் வீர வணக்க நாள் கூட்டத்தில் மருத்துவர் ராமதாசு, வைகோ, தா.பாண்டியன் மற்றும் பழ.நெடுமாறன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தளபதி பொட்டு அம்மானும் உயிருடன் இருக்கிறார்: திருமாவளவன் தெரிவிப்பு
[ புதன்கிழமை, 20 சனவரி 2010, 10:22.35 AM GMT +05:30 ]
விடுதலைப்புலிகளின் 2-ம் கட்ட தலைவரும், உளவுப்படை தளபதியுமான பொட்டுஅம்மான் கதி என்ன ஆனது? என்பதும் மர்மமாகவே இருக்கிறது. அவரும் உயிரோடுதான் இருக்கிறார் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறி இருக்கிறார்.
விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பதற்கு விடையளிக்கும் வகையில் விடுதலைப்புலிகளின் இணையதளம் ஒன்று அவர் உயிரோடு இருக்கிறார், விரைவில் மக்கள் முன் தோன்றுவார் என்று செய்தி வெளியிட்டு உள்ளது. விடுதலைப்புலிகளின் 2-ம் கட்ட தலைவரும், உளவுப்படை தளபதியுமான பொட்டுஅம்மான் கதி என்ன ஆனது? என்பதும் மர்மமாகவே இருக்கிறது. அவரும் உயிரோடுதான் இருக்கிறார் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறி இருக்கிறார். இதுபற்றி வாரப்பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- பிரபாகரன் தந்தை இறுதி சடங்கில் பங்கேற்க சென்றிருந்த எங்களிடம் பேசிய பலரும் பொட்டு அம்மான் பற்றியும் மறக்காமல் கேட்டனர். பிரபாகரன் இல்லை என்று கூறி சிங்கள அரசு அது தொடர்பாக ஏதோ ஒரு காட்சியை காட்டியது. ஆனால் பொட்டு அம்மான் இல்லை என்பது தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிட செய்யவில்லை. பிரபாகரன், பொட்டு அம்மான், சூசை ஆகிய 3 பேரும் ஒன்றாகத்தான் இருந்தனர். எனவே 3 பேரும் ஒன்றாக பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள் என்று பெரும்பாலான நபர்கள் கூறினார்கள். பிரபாகரனும், பொட்டு அம்மானையும் மரணத்தால் கூட பிரிக்க முடியாது. 2004-ல் நான் வன்னியில் பிரபாகரனை சந்தித்தபோது பொட்டு அம்மானை எனக்கு பிரபாகரன் அறிமுகப்படுத்தினார். அவர்கள் இருவரும் எவ்வளவு நம்பிக்கையுடனும், நட்புறவுடனும் இருக்கிறார்கள் என்று அப்போது என்னால் அறிய முடிந்தது. பிரபாகரனும் இருக்கிறார். பொட்டு அம்மானும் இருக்கிறார் என்று மக்கள் கூறிய கருத்தையே நானும் கூறுகிறேன். இவ்வாறு திருமாவளவன் கூறினார்

வியாழன், 15 அக்டோபர், 2009
அகதிகளின் மீள்குடியேற்றம் கண்ணிவெடி அகற்றிய பின்னரே: இந்திய
அகதிகளின் மீள்குடியேற்றம் கண்ணிவெடி அகற்றிய பின்னரே: இந்திய தூதுக்குழுவிடம் ஜனாதிபதி திட்டவட்டம்
[ புதன்கிழமை, 14 ஒக்ரோபர் 2009, 02:49.40 AM GMT +05:30 ]
வவுனியா முகாம்களில் தங்கியுள்ள மக்களை, அங்கு புதைத்து வைத்த கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு முன்னர், அவர்களின் சொந்தப் பகுதிகளில் மீளக்குடியேற்ற முடியாது. இவ்வாறு நேற்று தம்மைச் சந்தித்த இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவிடம் மிகத் திட்டவட்டமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பில் அவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மேலும் தெரிவிக்கையில்,
போரினால் அகதிகளாகி , வவுனியா முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள வன்னி மக்களை அவர்களின் சொந்தப் பகுதிகளில் இப்போதைக்கு மீளக்குடியேற்ற முடியாது.

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதி மக்களின் பாவனைக்கு திறக்கப்படவுள்ளது

[ புதன்கிழமை, 14 ஒக்ரோபர் 2009, 03:53.28 AM GMT +05:30 ]
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (கே.கே.எஸ்) வீதி மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இராணுவ அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படும் காங்கேசன்துறை சீமெந்து தொழில்சாலையை மீள நடத்தவிருப்பதாக அரசாங்கம் அறிவித்ததை அடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், இந்த பகுதியில் இருந்து சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த சுமார் 1 லட்சம் மக்கள் இன்னும் மீள் குடியேற்றப்படாத நிலையில், இந்த பாதை திறப்பு பயனற்றது என யாழ்ப்பாண நலன் ஒழுங்கமைப்புகள் தெரிவித்துள்ளன.
அடுத்து வரவுள்ள ஜனாதிபதி தேர்தல்களை இலக்கு வைத்து, காங்கேசன்துறை சீமந்து தொழிற்சாலையை மீள திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் யாழ்ப்பாண குடாநாட்டின் அதிவுயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தவறிவிட்டுள்ளதாக அந்த அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.

இலங்கை விஜயம் தொடர்பில் கருத்துக்கூறுவதற்கு தயக்கம்
இலங்கை விஜயம் தொடர்பில் பாலு, கனிமொழி திருமாவளவன் கருத்துக்கூறுவதற்கு தயக்கம்
[ செவ்வாய்க்கிழமை, 13 ஒக்ரோபர் 2009, 11:34.33 AM GMT +05:30 ]
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமிழக பாராளுமன்றக் குழுவினரை சந்தித்து, அவர்கள் பார்வையிட்ட அகதி முகாம்களின் நிலைவரங்கள் மற்றும் அவர்களின் கருத்துக்கள் குறித்து அறிய முயற்சித்த போதிலும், அது சாத்தியமான பயனை அளிக்கவில்லை.
தமிழக எம்.பி.க்களின் தூதுக் குழுவிற்குத் தலைமை தாங்கிய முன்னாள் அமைச்சர் ரி.ஆர்.தங்கபாலுவை சந்தித்து பேச முயற்சித்த போதிலும் அது சாத்தியமான கிட்டவில்லை. தமிழக முதல்வரின் மகளும் எம்.பி.யுமான கனிமொழியை அணுகியபோது அவர் நோ கொமன்ட்ஸ் என்று கூறி ஒதுங்கிக் கொண்டார். இலங்கை விவகாரத்தில் தமிழ் மக்களுக்கட தமிழகத்தில் அதிக குரல் கொடுத்தவரும் விடுதலை சிறுத்தைகள் அணியின் தலைவருமான திருமாவளவனைச் சந்தித்தப்போது அவரும் செவ்வியளிக்க மறுத்ததுடன், ஓரிரு வார்த்தைகளை கூறினால் அவர் கூறுகையில், முகாம்களில் இருக்கும் அகதிகள் தங்களை உடனடியாக மீளவும் தங்களுடைய சொந்த இடங்களுக்கு செல்வதற்கு அனுமதிக்குமாறு எங்களிடம் கோரிக்கை விடுத்தனர். அக்கோரிக்கையை இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவோம். இவ்விடயம் குறித்து இலங்கை அரசாங்கமும், இந்திய அரசாங்கமுமே தீர்மானிக்கும் என்றார்.

வவுனியா
வவுனியா வதைமுகாமின் சில வீடியோ காட்சி பதிவுகள்
[ புதன்கிழமை, 14 ஒக்ரோபர் 2009, 11:06.38 AM GMT +05:30 ]
யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து வதைமுகாமில் தங்கியிருக்கும் மக்களை ஜப்பானியர் சிலர் சந்தித்தனர்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)