எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 15 அக்டோபர், 2009

அகதிகளின் மீள்குடியேற்றம் கண்ணிவெடி அகற்றிய பின்னரே: இந்திய

அகதிகளின் மீள்குடியேற்றம் கண்ணிவெடி அகற்றிய பின்னரே: இந்திய தூதுக்குழுவிடம் ஜனாதிபதி திட்டவட்டம்
[ புதன்கிழமை, 14 ஒக்ரோபர் 2009, 02:49.40 AM GMT +05:30 ]
வவுனியா முகாம்களில் தங்கியுள்ள மக்களை, அங்கு புதைத்து வைத்த கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு முன்னர், அவர்களின் சொந்தப் பகுதிகளில் மீளக்குடியேற்ற முடியாது. இவ்வாறு நேற்று தம்மைச் சந்தித்த இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவிடம் மிகத் திட்டவட்டமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பில் அவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மேலும் தெரிவிக்கையில்,
போரினால் அகதிகளாகி , வவுனியா முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள வன்னி மக்களை அவர்களின் சொந்தப் பகுதிகளில் இப்போதைக்கு மீளக்குடியேற்ற முடியாது.

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதி மக்களின் பாவனைக்கு திறக்கப்படவுள்ளது

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதி மக்களின் பாவனைக்கு திறக்கப்படவுள்ளது
[ புதன்கிழமை, 14 ஒக்ரோபர் 2009, 03:53.28 AM GMT +05:30 ]
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (கே.கே.எஸ்) வீதி மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இராணுவ அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படும் காங்கேசன்துறை சீமெந்து தொழில்சாலையை மீள நடத்தவிருப்பதாக அரசாங்கம் அறிவித்ததை அடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், இந்த பகுதியில் இருந்து சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த சுமார் 1 லட்சம் மக்கள் இன்னும் மீள் குடியேற்றப்படாத நிலையில், இந்த பாதை திறப்பு பயனற்றது என யாழ்ப்பாண நலன் ஒழுங்கமைப்புகள் தெரிவித்துள்ளன.
அடுத்து வரவுள்ள ஜனாதிபதி தேர்தல்களை இலக்கு வைத்து, காங்கேசன்துறை சீமந்து தொழிற்சாலையை மீள திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் யாழ்ப்பாண குடாநாட்டின் அதிவுயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தவறிவிட்டுள்ளதாக அந்த அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.

இலங்கை விஜயம் தொடர்பில் கருத்துக்கூறுவதற்கு தயக்கம்

இலங்கை விஜயம் தொடர்பில் பாலு, கனிமொழி திருமாவளவன் கருத்துக்கூறுவதற்கு தயக்கம்
[ செவ்வாய்க்கிழமை, 13 ஒக்ரோபர் 2009, 11:34.33 AM GMT +05:30 ]
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமிழக பாராளுமன்றக் குழுவினரை சந்தித்து, அவர்கள் பார்வையிட்ட அகதி முகாம்களின் நிலைவரங்கள் மற்றும் அவர்களின் கருத்துக்கள் குறித்து அறிய முயற்சித்த போதிலும், அது சாத்தியமான பயனை அளிக்கவில்லை.
தமிழக எம்.பி.க்களின் தூதுக் குழுவிற்குத் தலைமை தாங்கிய முன்னாள் அமைச்சர் ரி.ஆர்.தங்கபாலுவை சந்தித்து பேச முயற்சித்த போதிலும் அது சாத்தியமான கிட்டவில்லை. தமிழக முதல்வரின் மகளும் எம்.பி.யுமான கனிமொழியை அணுகியபோது அவர் நோ கொமன்ட்ஸ் என்று கூறி ஒதுங்கிக் கொண்டார். இலங்கை விவகாரத்தில் தமிழ் மக்களுக்கட தமிழகத்தில் அதிக குரல் கொடுத்தவரும் விடுதலை சிறுத்தைகள் அணியின் தலைவருமான திருமாவளவனைச் சந்தித்தப்போது அவரும் செவ்வியளிக்க மறுத்ததுடன், ஓரிரு வார்த்தைகளை கூறினால் அவர் கூறுகையில், முகாம்களில் இருக்கும் அகதிகள் தங்களை உடனடியாக மீளவும் தங்களுடைய சொந்த இடங்களுக்கு செல்வதற்கு அனுமதிக்குமாறு எங்களிடம் கோரிக்கை விடுத்தனர். அக்கோரிக்கையை இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவோம். இவ்விடயம் குறித்து இலங்கை அரசாங்கமும், இந்திய அரசாங்கமுமே தீர்மானிக்கும் என்றார்.

வவுனியா

வவுனியா வதைமுகாமின் சில வீடியோ காட்சி பதிவுகள்
[ புதன்கிழமை, 14 ஒக்ரோபர் 2009, 11:06.38 AM GMT +05:30 ]
யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து வதைமுகாமில் தங்கியிருக்கும் மக்களை ஜப்பானியர் சிலர் சந்தித்தனர்.

சனி, 11 ஜூலை, 2009

தமிழராக பிறந்து சாதித்தது என்ன?

தமிழராக பிறந்து சாதித்தது என்ன? நம் இனத்தை நாமே அழித்தது தானே வேறு உண்டா? இல்லை காரணம் சுயநலம் நான் என்ற குறுகிய சுய வட்டத்திற்குள் இருப்பது தான். நாம் என்ற பரந்த அடிப்படையில் யோசிப்போம் ஆயின் இந்த மாதிரியான இழப்புக்களை சந்தித்துதிருக்க வேண்டியதில்லை இனி யாவது தமிழர்களாக இருந்து பல மாதிரியாக வடிவங்களில் உங்கள் ஓற்றுமையை காட்டுங்கள் இதுவே வெற்றியின் படிக்கல்லாகும்
1. பதவி ஆசையை விடு
2. உரிமைக்காக போராடு
3.உண்மையான தகவல்களை மக்களுக்கு வழங்குதல்
( இணையதள-பொய் பரப்புரையை உண்மையாக அப்பாவி மக்களை நாம்ப வைத்து உங்கள் கற்பான சக்தியை வளர்த்தது கொள்ளுங்கள்)
4. மக்களை தவறான பாதையில் நடத்தாதீர்கள்
5.மக்கள் புரட்சி நல்ல திர்வைத்தரும்

வியாழன், 25 ஜூன், 2009

வணங்காமண் கப்பல் மீது இந்திய கடற்படை சந்தேகம்: சென்னை துறைமுகத்தை விட்டு அகன்றது

வணங்காமண் கப்பல் மீது இந்திய கடற்படை சந்தேகம்: சென்னை துறைமுகத்தை விட்டு அகன்றது
[ திங்கட்கிழமை, 22 யூன் 2009, 12:21.09 PM GMT +05:30 ]

வன்னித் தமிழர்களுக்காக ஐரோப்பிய தமிழர்கள் அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்களுடன், இலங்கைக்குச் சென்று அங்கிருந்து திருப்பி விடப்பட்டு, சென்னை அருகே நின்று கொண்டிருந்த வணங்காமண் கப்பல் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாக இந்திய கடற்படை இன்று கூறியதையடுத்து சென்னை கடல் எல்லைக்கு அப்பால் கப்பல் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், வன்னித் தமிழர்களுக்காக உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்டவற்றை சேகரித்து கப்டன் அலி என்ற சிரியா நாட்டுக் கப்பலில் அனுப்பி வைத்தனர். இந்தக் கப்பலுக்கு வணங்கா மண் என்று அவர்கள் பெயரிட்டிருந்தனர்.

ஆனால் இந்தக் கப்பலை வன்னிப் பகுதிக்குப் போக விடாமல் இடைமறித்து கொழும்புக்குக் கொண்டு சென்றது இலங்கை கடற்படை. அங்கு சோதனையிட்டனர். இதில் சந்தேகத்திற்கு இடமான வகையில் எதுவும் இல்லை என்று தெரிவித்த இலங்கை அரசு, இருப்பினும் நிவாரணப் பொருட்களை இறக்காமல் அப்படியே திரும்பிப் போய் விடுமாறு உத்தரவிட்டது.

அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ள ஜனாதிபதி தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்

அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ள ஜனாதிபதி தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளார் - பஷில்
[ புதன்கிழமை, 24 யூன் 2009, 07:28.02 PM GMT +05:30 ]
தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு, அதிகாரபரவலாக்கலை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவினரை சந்தித்துப் பேச்சு நடத்தியதன் பின்னர் இந்திய தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே பஷில் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
உயர் பொலிஸ் அதிகாரி தமது குடும்பத்தாரை படுகொலை செய்துள்ளார்
[ செவ்வாய்க்கிழமை, 23 யூன் 2009, 05:22.04 AM GMT +05:30 ]
தெஹிவளைப் பிரதேசத்தில் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்களை படுகொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தனது மனைவி மற்றும் அவரது பெற்றோரை இவ்வாறு குறித்த காவல்துறை அதிகாரி படுகொலை செய்துள்ளார்.

தனக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தப் பாதகச் செயலை மேற்கொண்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்தத நிலையில் களுபோவில வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

குடும்பத் தகராறு காரணமாக இந்த படுகொலைகள் இடம்பெற்றிருக்கக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலை தாமே மேற்கொண்டதாக குறித்த காவல்துறை அதிகாரி ஒப்புக் கொண்டுள்ளதாகவும், தமக்கு தாமே துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புதன், 24 ஜூன், 2009

கனடாவில் ரகசிய இடத்தில் பிரபாகரன் மனைவி உயிருடன் இருக்கிறார் - மாலைமலர் தகவல்

கனடாவில் ரகசிய இடத்தில் பிரபாகரன் மனைவி உயிருடன் இருக்கிறார் - மாலைமலர் தகவல்
June 24,2009
இலங்கையில் கடந்த மே மாதம் நடந்த இறுதி கட்ட போரில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான உடல் ஆதார காட்சிகளையும் சிங்கள ராணுவம் வெளியிட்டது. பிரபாகரன் உயிருடன் இருப்பதாக விடுதலைப்புலிகளின் உளவுத்துறை அறிவித்தது.( more )

இனிவரும் போர்... இராஜதந்திரப்போர்! உண்மையறிந்து, களமறிந்து, காலமறிந்து நாம் களம் புகுவோம்!

ஈழத் தமிழினத்தினைப் போல பாவப்பட்ட வேறொரு இனம் தற்போது இருக்கமுடியாது. அந்தளவுக்கு பலவந்தமாக அவலப்படுத்தப்பட்ட இனமாகவும், சர்வதேசத்தினால் முற்றுமுழுதாகக் கைவிடப்பட்ட ஒரு இனமாகவும் ஈழத் தமிழினம் போய்விட்டுள்ளதென்பது சோகத்திலும் சோகமான விடயம்.

உலகநீதி கூறுவோரினதும்... மனிதாபிமானம், மனிதநேயம் பற்றி பேசுவோரினதும்... காந்தீயம், அகிம்சை, கொல்லாமை பற்றி வாய் கிழிய கத்துவோர்களினதும் முன்னிலையில், அவர்களின் ஆசீர்வாதத்துடனும் முழு ஒத்துழைப்புடனும் தமிழினம் மிகக் கொடூரமாக கொன்றொழிக்கப்பட்டதென்பது மனிதகுலமே வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயம்.

அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா அவர்கள் ஒரு ஈயை தன் கையால் அடித்துக் கொன்றுவிட்டார் என்பதற்காக அமெரிக்க ஜனாதிபதிக்கெதிராகவே கண்டனங்கள் தெரிவித்த இரக்கமிக்கவர்களின் கண்களுக்கு, ஈழத்தமிழர்கள் துடிதுடிக்க கொன்றொழிக்கப்பட்டது தெரியவில்லையா? அல்லது ஒரு ஈயை விடக் கேவலமானவர்கள் தமிழர்கள் எனக்கருதி அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லையா???

விலங்குகளைக் கூண்டுகளில் அடைத்து வைத்து அவற்றின் சுதந்திரத்தினைப் பறிப்பதற்கே பாய்ந்தடித்து, பதறியடித்துக் கொண்டு கண்டன அறிக்கைகள் விடும் ஈரநெஞ்சத்தவர்கள் , புனர்வாழ்வு முகாம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் சிங்கள அரசின் கொலைக்கூண்டுகளில் எந்த அடிப்படை வசதியுமின்றி, சுதந்திரமுமின்றி அடைக்கப்பட்டு சித்திரவதைப்படுத்தப்படும் அப்பாவித் தமிழர்கள் விடயத்தினைக் கண்டுகொள்ளாமல் கல்நெஞ்சக்காரர்களாக இன்னும் இருப்பது ஏன்???

இவை மட்டுமல்ல... பல்வேறு சந்தர்ப்பங்கள், சம்பவங்களுடன் ஒப்பிட்டு நோக்கும்போது... ஈழத்தமிழர்கள் ஒட்டுமொத்த சர்வதேசத்தினாலும் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது தெட்டத்தெளிவாகின்றது.பாரபட்சமான உலகநீதிக்குள் பழிவாங்கப்பட்டிருக்கின்றது ஈழத்தமிழினம்.

தமிழர்களிற்கு அழிவை ஏற்படுத்தியவர்கள் வெளிப்படையான குற்றவாளிகள் என்றால், அதைத் தடுக்க வழிகள் இருந்தும் அதைத் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களும் மறைமுகமான குற்றவாளிகளே!.

வல்லரசு வல்லூறுகளின் பிராந்திய வல்லாதிக்கப் போட்டிகளின் நடுவே சிக்குண்டு சின்னாபின்னமாகிப் போனது ஈழத் தமிழரின் வாழ்வு. வளமாய் வாழ்ந்த இனம் இன்று தன் வாழ்வைத் தொலைத்து நிற்கின்றது. இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் சுயநலன்களுக்கு அப்பாவித் தமிழினம் இரையாகி இழந்தது அதிகம்.

குறிப்பாக இந்தியாவின் பழிவாங்கல் துரோகத்தனத்தினை என்றுமே ஈழத்தமிழினம் மறக்காது, மன்னிக்காது. அரவணைக்கும் என்று நம்பியிருந்தவர்களின் எதிபார்ப்பையும் எதிர்காலத்தையும் அழித்தொழிக்க சிங்களத்தோடு கூடிநின்று குழிபறித்தது. சந்தர்ப்பம் பார்த்து ஈழத்தமிழர்களின் முதுகில் குத்தியது. சிங்களவெறியர்களின் கொலை வெறியாட்டத்தினை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது சோனியா அம்மையார் தலைமையிலான இந்தியக் காங்கிரஸ் அரசு.

புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டார்கள் என்பதை நினைத்து அகமகிழ்ந்து தன் கணவர் ராஜீவ் காந்தியின் சமாதியில் கடந்த மே 21 ல் அவரது நினைவு தினத்தன்று மனநிறைவோடு அஞ்சலி செலுத்தினாராம். அதற்கு அவர் பலியெடுத்த அப்பாவித் தமிழ்மக்களின் உயிர்கள்தான் எத்தனை ஆயிரம்?

அதைவிட சீனாவின் ஆதிக்கப் போட்டியார்வத்தில் அது சிங்களத்துக்கு அள்ளிக் கொடுத்த கொத்துக் குண்டுகளில் கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டது தமிழினம். "பொய்வித்தை வியாபாரி" சீனாவின் வர்த்தக, வல்லாதிக்க நோக்கத்தினால் நொடிக்கப்பட்டது அப்பாவித் தமிழினந்தான்.

இவையோடு சேர்த்து ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் தென்னாசிய நாடுகள் பலவும் சிங்களத்தோடு கூட்டுச் சேர்ந்து ஈழத்தமிழரின் குரல்வளையறுக்க கூடித் திட்டம் போட்டன.
அமெரிக்காவும்,மேற்குலக நாடுகளும் இதில் குறைவைக்கவில்லை. அவையும் தம் பங்கிற்கு தமது அதிகாரத்தினை ஆசியப் பிராந்தியத்தில் நிலைநிறுத்த தம்நிலை மறந்து தாளம் போட்டன.

இவர்களின் இரட்டை வேட நாடகங்களின் மத்தியில் தன் கொலைவெறியாட்டத்தினை கச்சிதமாக நடத்தி முடித்திருந்தது சிங்களம். பல்லாயிரக் கணக்கான தமிழ்மக்களைக் கொன்று குவித்த பின்னரும் சிங்களத்தின் கொலைவெறி இன்னும் அடங்கவில்லை. தினமும் கொலைகள், கடத்தல்கள், காணாமல்போதல்கள்,கைதுகள்,சித்திரவதைகள் என்பன இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஈழத்தமிழரின் பாரம்பரிய விழுமியங்கள், அடையாளங்களை இல்லாதொழிப்பதில் சிங்களம் கருத்தாய் செயற்படத் தொடங்கியிருக்கின்றது. தமிழ்மக்களின் பிரதேசங்களை பெளத்த சிங்கள மயமாக்குவதுடன், தமிழர்களுக்கான ஒரு ஆளுமைமிக்க தலைமையை இல்லாமற் செய்வதன்மூலம் தமிழர் என்ற தனித்துவத்தினை,அதிகார பிரதிநிதித்துவத்தினை இழக்கச் செய்வதும், இளம் சமுதாயத்தினர் மத்தியில் கலாச்சாரச் சீரழிவினை ஏற்படுத்தி அதன் மூலம் தமிழ் விடுதலையுணர்வை அடியோடு இல்லாமற் செய்வதற்கும் முன்னெடுப்புக்கள் நடக்கின்றன.

மொத்தத்தில் இலங்கையில் தமிழினம் என்பது ஒரு தனித்துவ அடையாளமில்லாத அடிமைப்படுத்தப்பட்ட இனமாக ஆக்கப்படக்கூடிய ஆபத்தான நிலையில் உள்ளது. இதையெல்லாம் மீறி தமிழினத்தின்பால் அக்கறைகொண்டு சுதந்திரமிக்க நியாயமான தீர்வொன்றை சிங்கள பேரினவாதிகளிடமிருந்து எதிர்பார்த்தோமானால் அதைவிட முட்டாள்தனம் வேறெதுவுமில்லை.

இவ்வாறான கீழ்த்தரமான நிலைமை ஈழத்தமிழினத்திற்கு வராமல் தடுக்க என்ன வழி?

ஈழத்தமிழர்கள் அகிம்சை வழியில் போராடி முடியாமல் போக, ஆயுதப் போராட்டமே ஒரே வழியென்று முடிவெடுத்து இற்றைக்கு முப்பது வருடங்களுக்கும் மேலாக போராடி ஒன்றரை இலட்சத்துக்கு மேலான மக்களையும், முப்பதினாயிரத்துக்கும் மேலான விடுதலைப் போராளிகளையும் இழந்தும் சர்வதேசத்தின் கரிசனை ஈழத்தமிழர் மீது முழுமையாக ஏற்படாத நிலையில், இவ்வளவு காலமாய் ஈழத் தமிழரை தலை நிமிர்ந்து நடக்க வைத்த ஆயுதப் போராட்டமும் முடிவடைந்து விட்டதான கருத்து எல்லாமட்டத்திலும் எழுந்து வருகின்றது.

ஆயுதப் போராட்டம் இனிமேலும் தொடரப்படுவதற்கும் இனி சாத்தியக் கூறுகள் இல்லை என்ற கருத்தும் எழுந்துள்ளது. இவற்றின் உண்மைத்தன்மை பற்றியும், இக்கருத்தினை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்களின் வாதப் பிரதிவாதங்களையும் தாண்டி இனிமேல் தமிழர்களின் போராட்டம் எந்த வழியில், யார் தலைமையில் தொடரப் போகின்றது?
அது எவ்வகையான போராட்டமாக அமையும் அல்லது அமையவேண்டும்?

தற்போதைய தோல்விகளின் பின் முன்னெடுக்கப்படும் போராட்டம் எந்தளவுக்கு வெற்றியளிக்கும்?

தனி ஈழம் என்ற இலட்சியத்தினையும் நியாயமான தீர்வினையும் அதன்மூலம் அடைய முடியுமா? என பலவாறான கேள்விகள் வரிசையாகக் காத்திருக்கின்றன.
ஆனால், கேள்விகள், விவாதங்களைத் தவிர்த்து காலவோட்டத்தில் நமது இலட்சியப் பாதையில் தடைகளைக் கடந்து பயணிக்கவேண்டிய காலக்கட்டாயத்தில் நாம் நிற்கின்றோம். இங்கு கேள்விகளுக்கோ அல்லது விவாதங்களுக்கோ இடமளிக்கக் கூடாது. இதுவரைகாலமும் நமது தேசியத்தலைவரின் தலைமையில் புலிகள் நமக்காக போராடியிருந்தார்கள்,

இப்போது நாமே நமது உரிமைகளுக்காக போராட வேண்டிய கட்டாயத்தில் நிற்கின்றோம். காலத்தின் , சந்தர்ப்ப சூழலின் தேவையறிந்து இப்படியான சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதன் அர்த்தம் புலிகள் முற்றாக அழிந்து விட்டார்கள் என்பதல்ல. அவர்கள் போராட்டங்களிலிருந்து முற்றாக ஒதுங்கி விட்டார்கள் என்பதல்ல. அவர்களுக்குரிய இடைவேளையிது. இப்போது போராட்டம் தமிழ்மக்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மீண்டும் வரவேண்டும் என கால நிர்ப்பந்தம் ஏற்பட்டால் நிச்சயம் மீண்டும் வருவார்கள். ஆனால் அதை தீர்மானிக்கப் போவது, உங்கள் கைகளிலும் சர்வதேசத்தின் கைகளிலும்தான் உள்ளது.

இந்தியாவில்இயக்குனர் சீமான்


இல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தடை எதற்கு இந்தியாவில்?: இயக்குனர் சீமான்
22 யூன்

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் தடையை விலக்க வேண்டும். இல்லாத இயக்கம் என்று அறிவித்துவிட்ட பிறகு புலிகளை தடைசெய்வதில் என்ன நியாயம் இருக்கிறது என்றார் இயக்குனர் சீமான்.

கோவை புலியகுளத்தில் தமிழர் உரிமை முன்னணி சார்பில் ஈழ ஆதரவாளர் மாநாடுஇ பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இயக்குனர் சீமான் பேசியதாவது:

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு தடை விதித்திருந்தாலும்இ அந்த மக்கள் தனி ஈழம் கேட்டுப் போராட உரிமை தந்திருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் அதற்குக் கூட உரிமையில்லை. எமது இன மக்கள் அங்கே பல்லாயிரக்கணக்கில் செத்து மடிவதை எதிர்த்துக் குரல் கொடுத்தால் சிறையில் அடைக்கிறார்கள். ஈழ மக்கள் விடுதலைக்காக குரல் கொடுக்க ஒரு இயக்கம் காண்பதைக் கூட இந்த அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

விடுதலைப்புலிகளுக்கு தடை விதிக்க அவுஸ்திரேலியா அரசு மறுத்து விட்டது. இலங்கையில் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்று சொல்கிறார்கள். அப்படியிருக்கும் போது இல்லாத இயக்கத்துக்கு எதற்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்திய அரசை அவுஸ்திரேலிய அரசு கேட்கிறது. அவுஸ்திரேலியாவின் இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இதையேதான் இப்போது நாங்களும் கேட்கிறோம்... இல்லாத இயக்கத்துக்கு தடை எதற்கு இந்தியாவில்?

இன்றைக்கு பிரபாகரன் குறித்தும்இ புலிகள் குறித்தும் பல வித கேள்விகள் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும்இ என்றார் சீமான்.

கொளத்தூர் மணி தலைமை தாங்கி பேசியதாவது:-

பெரியார் திராவிடர் கழகத்தை தடை செய்யப்போவதாக தகவல்கள் வருகின்றன. அப்படி தடை செய்யப்பட்டால் நாம் வேறு பெயரில் இயக்கம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்போது அந்த இயக்கத்திற்கு என்ன பெயர் வைப்பது? அதை அரசே முடிவு செய்யட்டும்.

தமிழ் ஈழ பிரச்சினை தற்காலிகமாக ஓய்ந்து இருக்கிறது. பிரபாகரன் இருக்கிறாரா? இல்லையா? இலங்கையில் தொடர்ந்து போர் நடக்குமா? என்ற கருத்துக்கள் நிலவுகிறது. ராஜபக்ச இன்னும் ஒரு இலட்சம் சிங்களவர்களை இராணுவத்தில் சேர்ப்பது என்று கூறுகிறார். அப்படி என்றால் அங்கு போர் தொடரும் என்று தானே அர்த்தம். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் இலங்கையில் உயிரிழந்த ஈழ தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிரேஸ்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் உயிருடன் இருப்பதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை



செவ்வாய்க்கிழமை 23 யூன் 2009
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர் உயிருடன் இருப்பதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பாவில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்புஇ புலி உறுப்பினர்கள் கொல்லப்படவில்லை என பிரசாரம் செய்து வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்துகின்றது.

எனினும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியமான சகல உறுப்பினர்களும் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொல்லப்பட்ட 43 முக்கிய விடுதலைப் புலி உறுப்பினர்களது பெயர்ப் பட்டியல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன

வியாழன், 18 ஜூன், 2009

இனி என்ன தமிழா உனக்கு?

இனி என்ன தமிழா உனக்கு?
உனது சுயநிர்ணய உரிமையை அடகு வைத்துவிட்டு உயிருக்காக பயந்து ஓடும் சாராசரி மனிதகாக வாழும் நிலை யாழ்ப்பாணத்தில் ( திறந்து விடப்பட்ட சிறையில் ) அந்த நிலை தான் தற்போது வவுனியாவில் எம் மக்கள் அவதிப்படுகின்றார். எம் மக்களின் ஓற்றுமையின்மையே இதற்கு காரணமாகின்றது. இதனை எம் மக்கள் இப்போது தெளிவாக சிந்திக்கும் நேரம் வந்துவிட்டது இதனை சிந்திக்காதுவிடின் எம் மக்களின் அழிவுகளை தற்போது போல் அரங்கேற்றப்படும். இன அழிப்புக்கான ஆரம்பகட்டத்தில் மக்களின் நிலை இப்படியாயின் இலங்கைத் தமிழரின் நிலைக்கு வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க ஏன் முனையமாட்டார்கள்? ...

புதன், 17 ஜூன், 2009

ஜெயலலிதா அறிக்கை

முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் கிடைக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயலலிதா அறிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 09 யூன் 2009, 12:26.28 PM GMT +05:30 ]
இலங்கையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு அடிப்படை வசதிகளும் நிவாரணமும் கிடைக்க இந்திய அரசாங்கம் முன்வர வேண்டுமென்று ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்ற பழமொழிக்கேற்ப, இலங்கையில் போர் நின்று விட்டாலும், அப்பாவித்தமிழர்களின் அவல நிலை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இலங்கை முகாம்களில் வாழும் இடம் பெயர்ந்த அப்பாவித்தமிழ் மக்கள் படும் துன்பங்களையும், வேதனைகளையும் வார்த்தைகளால் விளக்க முடியாது என்று நிவாரணப்பகுதிகளை நேரில் பார்த்த இலங்கைத்தலைமை நீதிபதி கவலையுடன் தெரிவித்துள்ளார். கழிப்பிடங்களுக்கு செல்வதற்குக்கூட நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை இலங்கைத்தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்றும் இலங்கை நாட்டு சட்ட திட்டத்தின்படி இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் இவ்வாறு வெளிப்படையாக சொல்வதால் தான் தண்டிக்கப்படலாம் என்றும், இலங்கைத்தலைமை நீதிபதி கூறி உள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்துள்ளன. இந்தச்சூழ்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் 11-வது கூட்டத்தொடரில் பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகார ஆணையர், இலங்கையில் தமிழர்கள் பகுதியில் மனித உரிமைகள் மீறப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார். இதற்கு பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இந்தியா இதற்கு எதிர்ப்பு தெரிவித்திக்கிறது. இதன் விளைவாக இலங்கை அரசின் மனித உரிமை மீறல் பிரச்சினை ஐக்கிய நாடுகள் சபையில் ஏற்கப்படவில்லை. இலங்கை அரசின் மனித உரிமை மீறல் குறித்து ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்தக்கூட இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருப்பது மன வருத்தத்தை அளிக்கிறது. எனவே, இடம் பெயர்ந்து முகாம்களில் வாழும் அப்பாவி இலங்கைத்தமிழர்களுக்கு மறுவாழ்வு அமைத்துத்தரவும், சிங்கள மொழி பேசும் மக்களுக்கு இணையாக தமிழ் மொழி பேசும் மக்கள் வாழவும், தமிழ் இன மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவும், இந்தியப்பேரரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என்று தமிழ் மக்களின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

இந்தியாச்செய்திகள்

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பத்தி கொண்டா, துக்கலி ஆகிய பகுதிகளில் உள்ள வயல்களில் விவசாயிகள் சிறிய ரக கண்ணாடி கற்களை கண்டெடுத்தனர். அவை மிகவும், மிணு மிணுப்பாகவும் இருளில் வெளிச்சத்தை உமிழ்வதாகவும் இருந்தது.
இந்த கற்கள் பற்றி தகவல் அறிந்ததும் ஜியோ மைசூர் என்ற நிறுவனம் பத்திகொண்டா பகுதியில் ஆய்வு நடத்தியது. அப்போது அந்த கற்கள் வைரம் என்பது தெரிய வந்தது. மேலும் வயலில் நடத்திய ஆய்வில் தங்க உலோகம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்நிறுவனம் தங்க சுரங்கம் அமைக்க முடிவு செய்தது. வயல் மண்ணில் தங்கம்- வைரம் கலந்திருப்பதை அறிந்ததும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு சென்றனர். பின்னர் மண்ணை தோண்டி தங்கம்-வைரம் இருக்கிறதா? என்று தேடுதல் வேட்டையில் குதித்தனர். அப்போது ஒரு சிலருக்கு வைரக்கற்கள் கிடைத்தன. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த விவசாயிகளிடம் இருந்து வைர வியாபாரிகள் குறைந்த விலைக்கு அதை வாங்க சென்றனர். இன்று காலையில் அங்கு மேலும் கூட்டம் திரண்டதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
மக்கள் பிரச்சினையை தீர்த்ததால் வெற்றி: மு.க. ஸ்டாலினுக்கு முக்கிய இடம் கிடைக்கும்; கருணாநிதி பேட்டி