| வணங்காமண் கப்பல் மீது இந்திய கடற்படை சந்தேகம்: சென்னை துறைமுகத்தை விட்டு அகன்றது |
| [ திங்கட்கிழமை, 22 யூன் 2009, 12:21.09 PM GMT +05:30 ] |
வன்னித் தமிழர்களுக்காக ஐரோப்பிய தமிழர்கள் அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்களுடன், இலங்கைக்குச் சென்று அங்கிருந்து திருப்பி விடப்பட்டு, சென்னை அருகே நின்று கொண்டிருந்த வணங்காமண் கப்பல் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாக இந்திய கடற்படை இன்று கூறியதையடுத்து சென்னை கடல் எல்லைக்கு அப்பால் கப்பல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. |
| ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், வன்னித் தமிழர்களுக்காக உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்டவற்றை சேகரித்து கப்டன் அலி என்ற சிரியா நாட்டுக் கப்பலில் அனுப்பி வைத்தனர். இந்தக் கப்பலுக்கு வணங்கா மண் என்று அவர்கள் பெயரிட்டிருந்தனர். ஆனால் இந்தக் கப்பலை வன்னிப் பகுதிக்குப் போக விடாமல் இடைமறித்து கொழும்புக்குக் கொண்டு சென்றது இலங்கை கடற்படை. அங்கு சோதனையிட்டனர். இதில் சந்தேகத்திற்கு இடமான வகையில் எதுவும் இல்லை என்று தெரிவித்த இலங்கை அரசு, இருப்பினும் நிவாரணப் பொருட்களை இறக்காமல் அப்படியே திரும்பிப் போய் விடுமாறு உத்தரவிட்டது. |
வியாழன், 25 ஜூன், 2009
வணங்காமண் கப்பல் மீது இந்திய கடற்படை சந்தேகம்: சென்னை துறைமுகத்தை விட்டு அகன்றது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக